கதிர் – ரெமோ நிஷா நடிப்பில் ‘காதலாகி’ பாடல்

563

எஸ்.எஸ்.கெமல் இயக்கத்தில் கதிர் – ரெமோ நிஷா நடிப்பில் அண்மையில் வெளிவந்துள்ள பாடல் ‘காதலாகி’. சாரு ராம் இசையில் உருவாகியுள்ள இப்பாடலுக்கான வரிகள் சதா பிரணவன். பாடியவர் கிரி ஜி. பாடல் இடையே வரும் ரப் வரிகளை எழுதிப்பாடியுள்ளார் சிவி லக்ஸ்.

மிக அழகாக அமைந்துள்ள இக்காணொளிப்பாடலுக்கான ஒளிப்பதிவு அலெக்ஸ் கோபி. படத்தொகுப்பு ஜதீபன். கதிர் – ரெமோ நிஷா – ஜெயந்தன் விக்கி – பரத் ஆகியோர் தோன்றி நடித்துள்ள இப்பாடலை இயக்கியுள்ளார் எஸ்.எஸ்.கெமல்.

பாடலின் பெரும்பகுதி மத்திய மலைநாட்டில் எடுக்கப்பட்டிருப்பதால் காட்சிகள் கண்களைக் குளிர்விக்கின்றன. நடிகர் – படத்தொகுப்பாளர் என பரவலாக அறியப்பட்ட கதிர் இதில் தன்னை ஒரு நடிகராகவும் நிரூபித்துள்ளார். ஒளிப்பதிவு – படத்தொகுப்பு பல இடங்களில் ‘அட!’ போட வைக்கிறது.