மதுஸ்ரீ ஆதித்தன் குழுவினரின் ‘உந்தன் தேசத்தின் குரல்’ Cover song

368

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘தேசம்’ படத்தில் இடம்பெற்ற ‘உந்தன் தேசத்தின் குரல்..’ என்ற வாலியின் வரிகளில் அமைந்த பாடல் மிகப்பிரசித்தமானது. அப்பாடல் வெளிவந்த காலத்தில் எம் தேசத்தின் விடிவிற்காவே அந்தப் பாடல் பாடப்பட்டதாக ஒவ்வொரு ஈழத்தமிழர்களும் அப்பாடலின் வரிகள் மற்றும் ரஹ்மானின் குரலுடன் ஒன்றித்துப் போயினர்.

வருடங்கள் பல கடந்த பின்னர் அப்பாடலுக்கான ‘cover version’ ஒன்றை மதுஸ்ரீ ஆதித்தன் குழுவினர் வழங்கியுள்ளனர். இந்தப் பாடலை மதுஸ்ரீ உடன் இணைந்து நிதர்ஷன் சிந்துஜன் டிலானி கோபிஷாந்த் ஆகியோர் பாடியுள்ளனர்.. பாடலுக்கு மேலும் அணி சேர்க்கும் வகையில் ஈழத்தின் புகழ்பூத்த நாதஸ்வர வித்துவான் கே.பி.குமரன் நாதஸ்வரம் வாசித்துள்ளார்.

பாடலுக்கான ஒழுங்கமைப்பு மற்றும் ஒலிக்கலவை அங்குஷன். ஒலிச்செம்மைப்படுத்தல் சாய் தர்சன். காணொளிப்பாடலுக்கான ஒளிப்பதிவு ராஜ் மூவி படத்தொகுப்பு ரெஜி செல்வராஜா. டிஷைன் ஜது.