A Level முடித்து Next Level போக துடிக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய கதை “அக்னிச் சிறகுகள்”

1030

எமக்கென்று தனித்தனியான ஆற்றல்கள் திறமைகள் இருக்கும் போது பத்தோடு பதினொன்றாக நாம் ஏன் இருக்க வேண்டும்? என்கின்ற மிகப்பெரும் கேள்வியை இளையவர்கள் மத்தியில் எழுப்புவதாக அமைந்திருக்கின்றது இளங்கோ ராமின் ‘அக்னிச் சிறகுகள்’ குறும்படம்.

youlead.lk இன் அனுசரணையில் வெளியாகியிருக்கும் இக்குறும்படத்தின் தயாரிப்பாளர் ஹிரன்யா இளங்கோ. தயாரிப்பு வடிவமைப்பாளர் ஆகாஸ் தியாகலிங்கம். இசை பசில் தங்கராஜா. படத்தொகுப்பு ஆதன் சிவானந்தர். எழுதி, இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கின்றார் இளங்கோ ராம்.

புதிய சிந்தனையுடன் சிகரம் தொட எத்தனிக்கும் எம் ஒவ்வொருவரின் கதை இது. A Level முடித்து Next Level போக துடிக்கும் நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய கதை “அக்னிச் சிறகுகள்”.