டிசம்பர் 1 இல் வெளியாகிறது கதிரின் ‘He is Alone’ குறும்படம்

1023

குணா ஆறுமுகராஜாவின் தயாரிப்பில் கதிரின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘He is Alone’ என்கிற குறும்படம் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி யு-ரியூப்பில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

இக்குறும்படத்தின் அட்டகாசமான டீசர் ஒன்றையும் அண்மையில் படக்குழு வெளியிட்டுள்ளது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, மேக்கிங் என அனைத்தும் மெச்சத்தக்க வகையில் அமைந்திருக்கும் இக்குறும்படத்திற்கான ஒளிப்பதிவு ரெஜி செல்வராஜா. படத்தொகுப்பு மற்றும் VFX கதிர். இசை ஜெயந்தன் விக்கி.

வாகீசன், ஜொனி அன்டன், ஆர்ஜே நெலு, விது, திசான் ஆனந்த், Shasha Sherin ஆகியோர் நடித்திருக்கும் இக்குறும்படத்திற்கான உதவி இயக்கம் சனோஜன் யோகதாஸ், விஜே தமிழன்டா ஆகாஷ.