இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெறும் வசந்தசீலனின் ‘நாநீ’ திரைப்பட முதற்பார்வை

409

இயக்குனர் வசந்தசீலனின் முதலாவது முழு நீளத்திரைப்படமான ‘நாநீ’ படத்தினுடைய முதற்பார்வை (First look) இன்று இணையத்தில் வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அதிசயா புரொடக்ஸனுடன் இணைந்து New born சினிமா தயாரித்துள்ள இப்படத்தினுடைய ஒளிப்பதிவு தனுவன் பெலிசியன், படத்தொகுப்பு சுலேக்ஸன், இசை பத்மயன் சிவா, உதவி இயக்குனர்கள் நிஸாந்தன் மற்றும் AK கஸ்துரன்.

வசந்தசீலன் மற்றும் கிஷந்த் ஸ்ரீ ஆகியோர் பிரதான பாத்திரமேற்று நடித்துள்ள இத்திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் வவுனியாவைச் சேர்ந்த வசந்தசீலன். இணையத்தில் தற்சமயம் பலரது வரவேற்பையும் பெற்று வரும் இப்படத்தின் முதற்பார்வையினை Sazi பாலசிங்கம் வடிவமைத்துள்ளார்.