ஷமீலின் இசையில் ‘விழி மூடினால் அன்பே’ பாடல்

490

CC Production தயாரிப்பில் Chancy Bartholomews வரிகளில் ஷமீல் J இசையில் நவீன் குட்டியின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகிவரும் காணொளிப்பாடல் ‘விழி மூடினால் அன்பே’.

பேர்லிஜா, ஷமீல், ஸ்ரீ சங்கர் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவான இப்பாடலின் முதற்பார்வை மற்றும் கதாபாத்திர அறிமுக காணொளி அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய விருது பெற்ற, எமது மண்ணின் பிரபல இசையமைப்பாளர் டிரோன் பெர்ணான்டோ அவர்களால், சமூக வலைத்தளங்களில் இம்முன்னோட்டம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

எந்தவித பாரபட்சமுமின்றி ‘எமது கலைஞர்களுக்கான நாம்’ எனும் வகையில் எமக்கான முழு ஒத்துழைப்பையும் வழங்கிய டிரோன் பெர்ணான்டோ அவர்களுக்கு பாடல் குழு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பாடலுக்கான ஆதரவை பார்வையாளர்களிடம் வேண்டி நிற்கின்றனர்.