‘Agenda 14 -2020’ விருதுகளை வென்ற தனுசன், லிங் சின்னா & கதிர்

912

‘Agenda 14’ 10 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்து நடத்திய குறும்படப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டன.

இம்முறை ‘கொவிட் 19’ நிலைமை காரணமாக மிகவும் எளிமையான முறையில் இந்த நிகழ்வுகள் கடந்த 23 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டதுடன், அது இணையம் வாயிலாக ஒளிபரப்பட்டது.

10 ஆவது Agenda 14 குறும்பட விருது வழங்கல் நிகழ்வில் நம்மவர்களான லிங் சின்னா, தனுஷன் ஆகியோர் விருதுகளை வென்றுள்ளதுடன், கதிர் சான்றிதழையும் பெற்றுக் கொண்டார்.

Most Gender Sensitive Film – Ling Chinna (Hebrew Lilith)
Most Promising Film Maker – Thanushan (Never travel alone)
Human rights Award – Nominee – Kathir (Nilam)

2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த குறும்படமாக Tharinthu lokuarachi இயக்கத்தில் உருவான ‘My father is a dog’ என்கிற குறும்படம் தெரிவானது. கொரோனா தனிமைப்படுத்தல் சூழ்நிலையில் தந்தை மற்றும் மகளுக்கு இடையே இடம்பெறும் சம்பவங்களை வைத்து இந்தக்குறும்படம் அமைக்கப்பட்டுள்ளது.

Best film – My father is a dog Tharinthu lokuarachi

Agenda 14 விருது விழாவை இம்முறையும் அதன் ஏற்பாட்டாளர் அனோமா ராஜகருணா திறம்பட ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருதுகள் தெரிவுக்குழுவின் தலைவராக பிரபல இயக்குனர் அசோக ஹந்தகம செயற்பட்டிருந்தார். அவரின் கீழ் உறுப்பினர்களாக சன்ன தேசப்பிரிய (ஒளிப்பதிவாளர்), அகிலன் பாக்கியநாதன், அனுர சில்வா, இந்திரா ஜொங்லாஸ், உள்ளிட்டவர்கள் செயற்பட்டிருந்தனர்.

இலங்கையில் உள்ள தமிழ், சிங்கள சினிமா செயற்பாட்டாளர்களுக்கும், இளங்கலைஞர்களுக்கும் Agenda 14 விருதுகள் முன்மாதிரியாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.