தமிழ், சிங்கள மொழிகளில் வெளியாகியுள்ளது ரோய் ஜக்சனின் ‘செல்லப் பூவே’ பாடல்

481

இலங்கையின் முன்னணி பாடகர் ரோய் ஜக்சனின் ROY JMUSICAL PRODUCTION இங்கிலாந்தைச் சேர்ந்த ROY JMUSICAL PRODUCTION உடன் இணைந்து தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தயாரித்துள்ள பாடல் ‘செல்லப் பூவே’.

இந்தப்பாடலுக்கான இசை ஏ.ஆர்.ஜிதேந்திரா. பாடல் வரிகள் அசாம் அஸ்மல் (தமிழ்), பாடியவர்கள் ரோய் ஜக்சன் மற்றும் சேஷிகா அமிர்.

காணொளிப்பாடலாக வெளியாகியுள்ள ‘செல்லப் பூவே’ பாடலில் ஹட்டன் நவா, பேர்லிஜா ஜெயராஜ் நாயகன், நாயகியாக நடித்திருக்க மேலும் பல கலைஞர்கள் தோன்றியுள்ளனர். இதனை ரோய் பாக்யநாதன் இயக்கியுள்ளார்.

பாடல் ஒளிப்பதிவு பிரியந்த விஜேகோன், படத்தொகுப்பு ஆர்.கே.ஷாலினி, மேக்-அப் லிந்துஜா.

தொடர்ச்சியாக சிங்கள ரசிகர்களிடையேயும் தனது படைப்புக்களால் பிரபலம் பெற்றுவரும் ரோய் ஜக்சன், இந்தப் பாடலையும் இரு மொழிகளிலும் சிறப்பாக பாடி, அழகான காணொளிப்பாடலாக வெளியிட்டுள்ளார்.