கதிரின் மிரட்டலான இயக்கத்தில் ‘He is Alone’ குறும்படம்

565

‘தடம்’ தயாரிப்பில் குணா ஆறுமுகராஜா வழங்கியுள்ள குறும்படம் ‘He is Alone’. இதனை கதிர் இயக்கியுள்ளார். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் நடந்த; நினைவை விட்டு போக மறுக்கும் ஒரு சம்பவத்தை மையப்படுத்தி இதனை த்ரில்லராக இயக்கியுள்ளார் இயக்குனர்.

பிரதான பாத்திரமேற்று நடித்திருக்கும் வாகீசன் நடிப்பில் மிரட்டியிருக்கின்றார். அவருடன் இணைந்து விது, ஜொனி, திசை ஆந்த், ஆர்.ஜே. நிலு மற்றும் ஷாஷா செரின் ஆகியோர் நடித்திருக்கின்றார்கள். பலரது முகங்களிலும் முகக்கவசம் என்பதால், ஆட்களை அடையாளம் காண முடியவில்லை. ஒரு ‘கரெக்டர் ஆர்டிஷ்டாக’ சிறப்பாக தம் பணியைச் செய்திருக்கின்றார்கள். அதிலும் ‘அக்ஷன்’ காட்சிகள் அபாரம்.

இப்படியான படத்திற்கு பெரும் பலமே தொழில்நுட்பக்கலைஞர்கள் தான். இதன் ஒளிப்பதிவு ரெஜி செல்வராஜா, படத்தொகுப்பு மற்றும் VFX காட்சிகள் கதிர். மிக அருமையாக செதுக்கியிருக்கின்றார்கள். இவர்களுக்கு போட்டியாக இசை மற்றும் SFX இல் ஜெயந்தன் விக்கி அசத்தியிருக்கின்றார். தயாரிப்பு உதவி கார்த்திக் சிவா மற்றும் ஆகாஷ்

இவ்வாறான குறும்படங்கள் மூலம் எம்மவர்களின் சினிமா திறனையும் மதிப்பிட முடிகின்றது. பிரமாண்டங்களை இல்லாவிட்டாலும் குறைந்த தயாரிப்புச் செலவில் சில பிரமாதங்களையாவது இந்த கலைஞர்கள் நிகழ்த்தும் வல்லமை படைத்தவர்கள் என்பதை ‘He is Alone’ மூலம் கண்டுகொள்ளலாம்.