‘எல்லாம் கடந்து போகும்’ குறும்படம் வெளியீட்டு (புகைப்படத்தொகுப்பு)

368

மன்னார் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் இயக்கத்தில் உருவான ‘எல்லாம் கடந்து போகும்’ குறும்படம் நேற்றைய தினம் (27) மாலை மன்னார் ஆஹாஸ் விடுதியில் வெளியீடு செய்யப்பட்டது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டு குறித்த குறும்படத்தை வெளியீடு செய்தனர்.

குறித்த வெளியீட்டு நிகழ்வில் திணைக்கள அதிகாரிகள் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் இயக்கத்தில், உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், தற்கொலைக்கு எதிரான விழிர்ப்புணர்வை இன்றைய சமூகங்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையிலும் குறித்த குறும்படம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.