‘BIGBOSS’ புகழ் தர்ஷன், லொஸ்லியா இணைந்து நடிக்கும் புதிய படம் ‘கூகுள் குட்டப்பன்’

679

விஜய் ரி.வி.யில் ஒளிபரப்பான பிக் பொஸ் 3 ஆவது சீசனில் (BB3) போட்டியாளர்களாக கலந்துகொண்ட இலங்கையைச் சேர்ந்த தர்ஷனும், லொஸ்லியாவும் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளனர்.

மலையாளத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் பிக்பொஸ் பிரபலம் தர்ஷன் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளார். மேலும் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இதில் முக்கிய வேடம் ஏற்றுள்ளார்.

அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்க உள்ளனர். இவர்கள் இருவரும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் ஆவர்.

இப்படத்திற்கு ‘கூகுள் குட்டப்பன்’ என பெயர் வைத்துள்ளதுடன், படபூஜை இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

பிக்பொஸ் போட்டியில் இறுதிவரை முன்னேறிய லொஸ்லியே ஏற்கனவே இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஜோடியாக ‘பிரெண்ட்ஷிப்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இது அவருக்கு இரண்டாவது தமிழ்ப்படமாகும்.

தர்ஷன் பிக் பொஸ் மேடையில் வைத்தே ‘ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நெஷனல்’ தயாரிக்கும் படத்தில் நடிப்பதற்கு நடிகர் கமல்ஹாசனால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இன்னும் அப்படம் குறித்த மேலதிக அறிவிப்புக்கள் வெளியாகாத நிலையில், ‘கூகுள’ குட்டப்பன்’ அப்டேட் வந்துள்ளது. வாழ்த்துக்கள் இருவருக்கும்.