ஈழநிலா இயக்கத்தில் திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் ‘வெண்பா’ குறும்படம்

722

இலங்கையில் முதன் முதலாக திருநங்கை ஒருவரின் இயக்கத்தில் வெளிவரும் தமிழ் குறுந்திரைப்படம் ‘வெண்பா’.

‘தமிழ்பேசும் LGBTQIA+ சமூகம்’ அமைப்பின் செயற்பாட்டாளர் ஈழ நிலா அவர்களின் இயக்கத்தில் திருநங்கைகளின் வாழ்வியலினைக் கருப்பொருளாகக் கொண்டு இந்த குறுந்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை ஈழநிலா அவர்கள் திரைக்கதை, வசனம், பாடல் வரிகள் எழுதி இயக்க, RJ கலையகம் வாணி அவர்கள் தயாரிக்கின்றார்.

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு யோ. சசிகரன், இசை J.ரோபர்ட்சன், நடிகர்கள்: எழில், லஜீபன், ஆஷா, சரன் சங்கர், D. K. தினேஷ் குமார்.

தமிழ்பேசும் சமூகத்தில் திருநங்கைகளின் வாழ்வியலின் ஒரு பகுதியை உணர்ச்சிபூர்வமாக இக் குறுந்திரைப்படம் சமூகத்துக்கு சொல்லும் என்பதில் ஐயம் இல்லை என ‘தமிழ்பேசும் LGBTQIA+ சமூகம்’ தெரிவித்துள்ளனர்.