‘டோகாஸ்’ குறும்படத்தின் First lookஐ வெளியிட்ட ஷியா உல் ஹசன்

451

அகபே கிரியேட்டிவ் தயாரித்துள்ள புதிய குறும்படம் பற்றிய அறிவிப்பை கடந்த சுதந்திர தினத்தன்று (04) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அவர்களின் புதிய தயாரிப்பான ‘டோகாஸ்’ (DOCHAS) குறும்படத்தினுடைய முதற்பார்வையினை சிரேஷ்ட ஊடகவியலாளரும், இயக்குனருமான ஷியா உல் ஹசன் கடந்த 03 ஆம் திகதி வெளியிட்டிருந்தார்.

இந்த குறும்படத்தை சுயாதீன திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.ஸ்டீபன் தயாரித்து இயக்குகின்றார். ஒளிப்பதிவு எஸ்.ஜே.பிரசாத், இசை கே.ஜுதா, தயாரிப்பு மேலாளர் லவின் பிரிட்டோ, உதவி இயக்குநர்கள் மெம்ரோய் ஸ்டீவ், ஜே.ஜே.பிரவீன், ஒளிப்பதிவு உதவியாளர் ரெமினாத் அஜய், சந்தைப்படுத்தல் தலைவர் லக்ஷன்.

குறும்படத்தின் தலைப்பு வித்தியாசமாக இருப்பதால், படம் எதைப் பற்றியது என்பதில் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான தகவலை வெளிப்படுத்துகிறது. இது பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கின்றது.

குறித்த குறும்படத்தை திரையரங்கிலும் டிஜிட்டல் தளங்களில் வெளியீடு செய்ய எதிர்பார்ப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.