காதலின் ரகசிய போராட்டத்தைப் பேசும் ‘காதல் மொழியே’ பாடல்

300

Mother’s Dreams Production இன் தயாரிப்பிலும் AK Kamal Photography இன் அருமையான ஒளிப்பதிவிலும் காதலர் தினத்தன்று இன்று (14) வெளியாகியுள்ள அழகான காதல் பாடல் “காதல் மொழியே”.

இந்தப்பாடலுக்கான இசை வெற்றி சிந்துஜன். பாடலை உணர்வுகளுடன் அழகாக பாடியுள்ளார்கள் சங்கீர்த்தன் மற்றும் மடோனா. பாடல் வரிகள் பொலிகை குமரன்.

பாடலில் தோன்றி நடித்திருக்கின்றார்கள் துவாரகன் மற்றும் கஸ்தூரி. சிறப்பாக பாடலை இயக்கியிருக்கின்றார் வாகிசன் ராசையா. படத்தொகுப்பு தனோஜன்.

Simple & Best என்று பாராட்டக்கூடிய வகையில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எல்லோரும் ரசிக்கும் வகையிலான ஒரு காதல் பாடலைத் தந்த இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட ஒட்டுமொத்த பாடல் குழுவிற்கும் வாழ்த்துக்கள்.