‘பெண் அவள் தேவதை’ குறும்படப் போட்டியின் நடுவர் குழாம் அறிவிப்பு

304

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு (2021) நட்சத்திரக் கலைக்கூடம் ஏற்பாடு செய்திருக்கும் குறும்படப் போட்டியின் நடுவர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், சினிமாத்துறை சார்ந்த நிறைந்த அறிவும் அனுபவமும் கொண்ட நால்வர் இடம்பிடித்துள்ளனர். தமிழ், சிங்கள திரைப்பட நடிகை நிரஞ்சனி சண்முகராஜா, ஒளிப்பதிவாளர் – இயக்குனர் இளங்கோ ராம், சுயாதீன திரைப்பட இயக்குனர் பென்னட் ரத்னாயக்கா மற்றும் சினிமா செயற்பாட்டாளர் – ஊடகவியலாளர் பவணீதா லோகநாதன் ஆகியோரே அவர்களாவர்.

‘பெண் இயக்குனர்களைத் தேடும் பயணம்’ ஆக பெண்களை வலுவூட்டும் நோக்கில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்த குறும்படப்போட்டி மற்றும் விருது விழாவுக்கு படைப்பாளிகள் தமது குறும்படங்களை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி மார்ச் 01 ஆகும்.

போட்டியில் முதலிடத்தைப் பிடிக்கும் குறும்படத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் பணப்பரிசில் மற்றும் விருதும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடிக்கும் குறும்படங்களுக்கு முறையே 30 ஆயிரம், 20 ஆயிரம் ரூபா பணமும் விருதுகளும் வழங்கப்படவுள்ளன.