வழி தவறும் இளையோரை வழிப்படுத்தும் கோடீஸ்வரனின் “மாயை மற” குறும்படம்

473

இயக்குநர் கோடீஸ்வரனின் இயக்கத்தில், Visual Art Movies முரளிதரனின் தயாரிப்பில் உருவாகி அண்மையில் திரையரங்கில் வெளியிடப்பட்ட குறும்படம் “மாயை மற” (Mayai Mara).

இப்படத்தில் உதவி இயக்குநராகவும், வசனகர்த்தாவாகவும் சரோஷ் அறிமுகமாகியுள்ளார்.  பாடலாசிரியர்களாக விஷ்ணுஜன் மற்றும் நண்பன் லோஜி ஆகியோரும், படத்திற்கான பாடல் மற்றும் பின்னணி இசையமைப்பாளராக கேஷாந்த்தும், பாடகர்களாக குலேந்திரன், கேஷாந்த் மற்றும் யதுஷனா ஆகியோரும், ஒளிப்பதிவு – எடிட்டிங் மற்றும் வர்ணக்கலவை ஆகியவற்றிற்கு அபிஷேக்கும், விளம்பர வடிவமைப்பாளராக டுஜாவும் பணியாற்றி இருக்கின்றனர்.

சில அனுபவம் வாய்ந்த நடிகர்களுடன் பத்திற்கு மேற்பட்ட புதுமுக நடிகர்கள் இதில் அறிமுகமாகியுள்ளனர், இம்ரான், கோடீஸ்வரன், ரெபேக்கா, தினுஷாந்த், நிகாரிகா, துவாரகா, ஸ்டேபான், பவித்திரன், திக்ஷனன், தினுஷன், இளங்கோ, பதிபன், ஜனிதன், யதுகனன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதற்பார்வை (First Look) தை மாதம் 23 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதனைத்தெடர்ந்து படத்தின் விளம்பரக் காணொளி (Teaser) தை மாதம் 27 ஆம் திகதி வெளியிடப்பட்டது. மட்டக்களப்பு பிரதேச சினிமா தனித்துவ அடையாளங்களுடனும் தொழில்முறையானதாகவும் வளர வேண்டும் எனும் நோக்கில் இதனை திரையரங்கில் வெளியிட தீர்மானித்திருப்பதாகவும் வெளியீட்டு நிறுவனத்தினால் மாசி மாதம் 7 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்தினை  கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கின்றார கோடீஸ்வரன். தொடர்ச்சியாக சமூகம் சார்ந்த விழிப்புணர்வுக் கதைகளைப் படமாக்கிவரும் இவர் காதல், போதை என்கின்ற இரண்டு விடயங்களை மையப்படுத்தி இளையோரை வழிப்படுத்தும் நோக்கில் சமூக அக்கறையுடன் இப்படத்தை இயக்கியுள்ளார். பாராட்டுக்கள் இயக்குனரே!