உலகத்தின் தொடக்கம் முடிவு வரை ஒரு காதல் பயணம் ‘யாதுமாகி’

1075

சி.சுதர்சன் (கனடா) இசையில் வெற்றி சிந்துஜன், கீதியா வர்மன் குரல்களில் வெளிவந்திருக்கும் அழகான காதல் பாடல் ‘யாதுமாகி’. இந்தப் பாடலுக்கான வரிகளை வெற்றி துஷ்யந்தன் எழுதியுள்ளார். பாடல் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை, இந்தியா மற்றும் கனடாவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆரபி புரொடக்ஷன் சார்பில் ரகீப் சுப்ரமணியம் தயாரித்துள்ள இந்தப் பாடலை அழகாக இயக்கியுள்ளார் எஸ்.என்.விஷ்ணுஜன். காணொளிப்பாடலில் சாத்வீகன் மற்றும் தரு கங்காதரன் ஆகியோர் தோன்றி நடித்துள்ளார்கள். பாடலுக்கான ஒளிப்பதிவு அச்சுதன், படத்தொகுப்பு அபிஷேக், உதவி இயக்கம் கிரிஷ்டிநாத், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் தினேஷ் நா.

வடக்கு மற்றும் கிழக்கு கலைஞர்களின் ஒன்றிணைவில் உருவாகியுள்ள காதலைப் போற்றும் இப்பாடல் சமூக வலைத்தளங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Music: Christian Sutharsan
Lyrics – Vetti thushyanthan
Vocals : Vetti Sinthujan Geethiyaa Varaman
Flute : Nathan (India)
Dolac: Vimal Shanger
Female Voice Recording Studio : Midi Space Melodies (Canada)
Song Mixed Sutharsan
Mastered : Ruban (mathuram audio)