‘குடி’மக்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய சுவிகரனின் விழிப்புணர்வுக் குறும்படம் ‘D&D’

597

சுவிகரனின் இயக்கத்தில் அஜிபன் ராஜ் இன் ஒளிப்பதிவில் கார்த்திக் சிவாவின் படத்தொகுப்பில் அண்மையில் வெளிவந்துள்ள குறும்படம் D&D (ட்ரங் அன்ட் ட்ரைவ்).

இதில் சுவிகரன் பிரான்ஸிஸ் பத்மா மாலினி வின்சன் பிரதீப் அமலதாஸ் லிவிஸ்டன் சஞ்சய் ஆகியோர் நடித்துள்ளனர். கதை மற்றும் திரைக்கதை கார்த்திக் சிவா, இசை மற்றும் கூடுதல் சப்தம் பிரசாத் கிருஷ்ணபிள்ளை, கலை இயக்கம் ஏ.ஆர்.பிரதாப், வர்ணம் இளங்கோ சிறில், டிசைன்ஸ் யது FX.

நம் நாட்டில் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ள நிலையில், போதையால் ஏற்படும் வீதி விபத்துக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இந்தக் குறும்படம் அமைந்திருக்கின்றது. நிச்சயம் இப்படம் ‘குடி’மக்களுக்கு ஒரு பாடமாகவும் அமைந்திருக்கும். சமூகத்துக்கு தேவையான கதைக்கருவை அமைத்த படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்.