பெண் அவள் தேவதை குறும்பட விருது விழா பற்றிய அறிவித்தல்

490

நட்சத்திர கலைக்கூடம் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ‘பெண் அவள் தேவதை’ குறும்படப்போட்டியின் விருது வழங்கும் விழா எதிர்வரும் 20 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு இலங்கை மன்றக்கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

பெண் இயக்குனர்களிற்கான தேடலாக இடம்பெற்ற இந்த குறும்படப்போட்டியின் விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்கவுள்ள பெண் விருந்தினர்களின் விபரத்தினை நட்சத்திர கலைக்கூடம் வெளியிட்டுள்ளது.

அரசியல், சினிமா, ஊடகம், அழகுக்கலை என பல துறைகளில் சாதித்த பெண்கள் இந்நிகழ்வில் விருந்தினர்களாக பங்கேற்பதுடன், 24 பெண் இயக்குனர்கள் இப்போட்டிக்கென தமது குறும்படங்களை அனுப்பியுள்ளமை விசேட அம்சமாகும்.

Read more – ‘பெண் அவள் தேவதை’ குறும்படப் போட்டியின் நடுவர் குழாம் அறிவிப்பு