பெண் அவள் தேவதை குறும்படப் போட்டியில் முதலிடம் பிடித்த Dreams of Flowers

350

நட்சத்திரக் கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘பெண் அவள் தேவதை’ எனும் குறும்படப் போட்டி அண்மையில் நடத்தப்பட்டது.

இதன் விருது வழங்கும் வைபவம் கடந்த 20 ஆம் திகதி கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இந்த போட்டியில் முதலிடத்தைப் பெற்று 50 ஆயிரம் ரூபாய் பணப்பரிசையும் தட்டிச் சென்றவர் திருகோணமலையைச் சேர்ந்த ஹேம பிரியங்கா (குறும்படம் – Dreams of Flowers)

இந்தக் குறும்படப்போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற குறும்படத்திற்கு 30 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசு பெற்ற குறும்படத்திற்கு 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.