ஜீவானந்தன் ராம் இசையில் குட்டி லவ் ஸ்டோரி ‘கண்ணிரண்டிலே காந்தமா’

636

ஜீவானந்தன் ராமின் இசையில் சுதர்சன் ஆறுமுகம் மற்றும் ஜீவானந்தன் ராமின் குரலில் அண்மையில் வெளியாகியுள்ள பாடல் ‘கண்ணிரண்டிலே காந்தமா’. இந்தப் பாடலுக்கான வரிகளை அருள் செல்வம் எழுதியுள்ளார்.

காணொளிப்பாடலாக வெளியாகியுள்ள இதனை மாதவன் மகேஸ்வரன் இயக்கியுள்ளார். பாடலுக்குள் ஒரு குட்டி லவ் ஸ்டோரியினை வைத்து கலர்ஃபுள் கொண்டாட்டமாக அதனை படைத்துள்ளார். பாடலில் ஜோயல், விதுர்ஷா வைசாலி உள்ளிட்ட பலர் தோன்றியுள்ளனர்.

பாடல் ஒளிப்பதிவு சேனாதி சேனா, படத்தொகுப்பு மாதவன் மகேஸ்வரன், நடன அமைப்பு நரேஷ் நாகேந்திரன், கலை இயக்கம் மற்றும் டிஷைன்ஸ் தனு ஹரி.