எதை நினைத்தமோ அது நடந்தேறுகின்றது – ‘வேட்டையன்’ இயக்குனர் S.N.விஷ்ணுஜன்

701

கிழக்கிலங்கையில் இருந்து அண்மைய காலத்தில் சினிமா முயற்சிகள் திரையரங்கு வரை செல்வதை அவதானிக்க முடிகின்றது. இது உண்மையிலேயே அந்தக் கலைஞர்களுக்கு மிகப்பெரிய சந்தோசத்தையும் உத்வேகத்தையும் கொடுக்கும் என்பதில் ஐயம் இல்லை. தங்கள் உழைப்புக்கான பலனை, பாராட்டை நேரடியாகவே பெற்றுக்கொள்ளும் ஒரு இடம் கலைஞர்களுக்கு திரையரங்கு.

தனது ‘வேட்டையன்’ திரைப்படத்தை ஒரு வருடத்திற்கு முன்பு திரையரங்குகளில் திரையிட்ட இயக்குனர் S.N.விஷ்ணுஜன், குறும்படங்கள் + திரைப்படங்களின் திரையரங்கு நோக்கிய வருகை குறித்து உவகையடைகிறார். அவர் தனது மகிழ்ச்சியை இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்.

பொதுவாக எமது சினிமாக்கள் கொண்டாடபடவில்லை என மனது நொந்ததுண்டு. இந்திய, சிங்கள திரைத் துறை போன்று எமது சினிமா துறையிலும் கொண்டாட்டங்கள்.. நமது கலைஞர்களை கொண்டாட ‘கட் அவுட்’ அடிக்க, போஸ்டர் ஒட்டி பேட்டி காண, செல்பி எடுக்க, ரசிகர் பட்டாளம், நண்பர்கள் படை, ஊடகங்கள் வருகை , ஸ்பாட்லயே ரிவியூ இவ்வாறான ஒரு சினிமா கலாசாரம் வர வேண்டும் என நினைத்தோம்; அடி எடுத்து வைத்தோம்; நடந்து போகின்றோம்.

“வேட்டையன்” திரைப்படத்தை திரையில் இட்ட போது இலங்கை சினிமாக்கு ஒரு பாணி உண்டு; யதார்த்தம் பேசப்பட வேண்டும்; மசாலா சரி வராது; அவார்ட் எடுக்கணும்; அது பண்ண கூடாது; இப்படி பண்ண கூடாது; இவர்கள் எமது சினிமாவை கொச்ச படுத்துகிறார்கள் என்று பல பேர்கள் கூவியதுண்டு. அப்படி கூவியவர்கள் இலங்கை சினிமா யதார்த்த சினிமா என்று அந்த மசாலா கலப்பில்லாத சமூக நிலைப்பாட்டை எமது யுத்த வடுக்களை பேசிய திரைப்படங்களை தயாரித்த பல நண்பர்களின் பட வெளியீடுக்கு செல்லாமல் வீட்டில் இருந்து முகப்புத்தகத்தில் மாத்திரம் ‘congratulations’ போட்டு யதார்த்த சினிமாக்களுக்கு ஊக்கம் கொடுத்ததை பார்த்து புல்லரித்து போனோம் 😂🤫

கூவுவார்கள் கூவட்டும் நாம் நடப்போம்.
எதை நினைத்தமோ அது நடந்தேறுகின்றது.
சினிமா வர்த்தகமாக மாற வேண்டும்; விழாக்கோலம் பூண வேண்டும். எமது நடிகர்கள் இவ்ளவு சம்பளம் வாங்குறார்கள் எமது தொழிநுட்ப காரர்கள் இவளவு சம்பளம் வாங்குறார்கள் என்று YouTube சேனல் ஒன்றில் காணொளி வரும் நாள் தொலைவில் இல்லை.

அனைத்து படங்களும் திரை ஏறுகின்றன. நமது படங்கள் விசில்கள் அடித்து பார்க்க படுகின்றன.

தளராதவன் திரைப்படம் வெளியீடு, ஊடகவியாளர்கள் வருகை, பேட்டி, செல்பி ஸ்பாட் ரிவியூ… அந்த வளாகம் அப்படியே எதை பார்த்து நமது படைப்புக்கு இவ்வாறு நடக்காதோ என்று ஏங்கினோமோ அதுவே நடந்தேறியது.

இவ்வாறே நடப்போம்; எமது அனைத்து சினிமாக்களையும் கொண்டாடுவம்; நமக்குள் இருக்கும் சினிமாக்காரர்களை தட்டி எழுப்புவோம்.

வர்த்தக மயமாக மாறட்டும்; நாமும் நிமிர்ந்து நிப்போம்! நமக்கான ஒரு சினிமா துறை அனைவரும் பார்க்க உயர்ந்து நிக்கட்டும். அப்போது நாம் சொல்லும் ஒவ்வொன்றும் கேட்கப்படும் .