ஷர்மிளா வினோதினி இயக்கத்தில் “ஒரு ஒரு பொழுதும்” குறும்படம்

705

பூவரசி மீடியா தயாரிப்பில் ஈழவாணி வழங்கியுள்ள குறும்படம் “ஒரு ஒரு பொழுதும்”. இதனை ஷர்மிளா வினோதினி இயக்கியுள்ளார்.

எழுத்தாளர், ஊடகவியலாளராக அறியப்பட்ட ஷர்மிளா வினோதினியின் திரைத்துறை சார்ந்த முயற்சியாக இக்குறும்படம் அமைந்துள்ளது. இதன் ஒளிப்பதிவு அஜீபன் ராஜ். படத்தொகுப்பு மற்றும் வர்ணம் கார்த்திக் சிவா. இசை மற்றும் சிறப்பு சப்தம் ஜெயந்தன் விக்கி.

கார்த்திக் சிவா, நிந்துஜா, பேபி ஷிவாணி முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இக்குறும்படத்திற்கான இணை இயக்கம் சுவிகரன், உதவி இயக்கம் கவின் அஜன். ஒப்பனை அன்ட்ரூ ஜூலியஸ். தயாரிப்பு முகாமை யாழ். பத்மினி தர்மநாதன்.

மேலோட்டமாக பார்க்கும் போது சாதாரணமாக ஒரு குடும்பத்தில் நிகழக்கூடிய பிரச்சினையாக இருந்தாலும், இதுவே இன்று பல குடும்பங்களிலும் நிலவும் பொதுப்பிரச்சனை என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை.

அவசர கதி வாழ்க்கை, குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடாமை, மனைவி – பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேசாமை, தொலைபேசி – தொலைக்காட்சிக்குள் மூழ்கிவிடல், தாம்பத்திய திருப்தி இன்மை என்பன குடும்பங்களுக்குள் பல பிரச்சனைகளை வேறு வேறு ரூபங்களில் தோற்றுவித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

பிரச்சனைகள் குறித்து விவாதிப்பவர்கள் கூட அந்தப் பிரச்சனையின் ஆணி வேர்களைத் தேடிப்பிடித்து சரிசெய்ய நினைப்பதில்லை. எனவே சமூகத்திற்கு தேவையான கதையையே ஷர்மிளா தேர்ந்தெடுத்திருக்கின்றார். கொஞ்சம் திரைக்கதை, காட்சிப்படுத்தல்களில் மினைக்கெட்டிருந்தால் இன்னும் குறும்படம் மெருகேறியிருக்கும்.

Writen & Direction – Sharmila Vinothini
Produced by – Ezhavaani
Crew – Baby Shivani, Ninthuja, Karthik Siva, & Thanush Sivamynthan
Cinematography – Ajeeban Raj
Music & Sfx – Jeyanthan Vikey
Editing & Colour – Karthik Siva