அக்ஷன், அதிரடியில் மிரட்டும் ‘போர் வாள் 2’ பாடல் வெளியாகியது

607

‘போர் வாள்’ பாடலின் வெற்றியைத் தொடர்ந்து அதே கூட்டணி உருவாக்கியுள்ள பாடல் ‘போர் வாள் 2’. இதன் காணொளிப்பாடல் அண்மையில் வெளியாகியது.

சி.வி.லக்ஸின் வரிகள் மற்றும் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை சிவி லக்ஸூடன் இணைந்து ஜெனிபர் சாரா பாடியுள்ளார். வழக்கம் போல தனது குரலாலும் ‘ரப்’ வரிகளாலும் சிவி கலக்கியுள்ளார். சிவிக்கு ஈடு கொடுத்து ரப் பாடகியாக மிளிர்ந்துள்ளார் ஜெனிபர்.

காணொளிப்பாடலை எட்வார்ட் சேந்து இயக்கியுள்ளார். இதன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ஜெயந்திரன் மகேந்திரராஜா. பாடல் ஒளிக்கலவை திஷோன். தயாரிப்பு ‘லீ ஸ்பொட்ஸ்’.

பாடலின் சிவ பாரதன், எட்வார்ட் சேந்து, சிவி லக்ஸ், செந்தூரன், அருண் பிரகாஷ் அன்டனி, மைகேல் லக்ஷான், ராபிக் ஷா, தனுஷான், ஸ்டைலிஷ் ஆத்வின்.

ஒரு கேங்ஸ்டர் பின்னணியில் நட்பின் துரோகத்தைப் பேசும் வகையில் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. பாடல் படமாக்கிய விதம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, அக்ஷன் காட்சிகள் எல்லாம் பாராட்டும் படியாக உள்ளது. சினிமா முயற்சிகளில் இந்த மாதிரியான அக்ஷன் காட்சிகளும் முக்கிய இடத்தைப் பெறுவதால், அவ்வாறான கதைக்களத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.

தவிர, தொடர்ச்சியாக காதல், டூயட் என்று பாடல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் போது, வித்தியாசமாக ‘போர் வாள் 2’ வந்து பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கின்றது என்றும் கூறலாம்.