‘வெளிநாட்டு காசு’ குறுந்தொடரின் முன்னோட்டப்பாடல் வெளியாகியது

399

‘இம்போர்டஸ்’ தயாரிப்பாக ‘தமிழன் 24’ வெளியீடாக வரவுள்ளது ‘வெளிநாட்டு காசு’ குறுந்தொடர். இது எதிர்வரும் மே 7 ஆம் திகதி முதல் ‘Tamilan24 Tv’ என்ற யு-ரியூப் தளத்தில் வெளியாகவுள்ளதாக அதன் இயக்குனர் சசிகரன் யோ அறிவித்துள்ளார்.

இந்த தொடரின் முன்னோட்டமாக ஒரு பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மதீசன் இசையில் உருவான இந்தப் பாடலை சாந்தகுமார் எழுதியுள்ளார். பாடியவர் ஜோ சித்தன்,

இந்த தொடரில் விமல்ராஜ், இதயராஜ், சாந்தகுமார், வட்சு, அஜிந்தன், டரியன், விது, ஜெனிஸ்டன், பாஸ்கரன், எழில், லுஜீ, பூர்விகா, ரெமோ நிஷா, சியாமளா, ஆர்த்தி, ஷாலினி, வாணி, நிலுக்ஷிகா, ரெபேக்கா, சுருதி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு YTS Studios Pictures. இசை பூவன் மதீசன், பாடல் வரிகள் சாந்தகுமார், பாடியவர் ஜோ சித்தன், உதவி இயக்கம் ஜெனிஸ்டன், ஒப்பனை மற்றும் கலை இயக்கம் டரியன், தயாரிப்பு முகாமை சபேசன். எழுதி இயக்கியிருக்கின்றார் சசிகரன் யோ.

ஏற்கனவே, ஈழத்து சினிமாவில் பல்வேறு குறும்படங்களை இயக்கித் தயாரித்த சசிகரன் யோ, ஏனைய கலைஞர்களின் ஏராளமான படைப்புக்களிலும் பணியாற்றியுள்ளார். எனவே, வித்தியாசமான, ரசிக்கக் கூடிய ஒரு வெப் சீரிஸூடன் ரசிகர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கலாம்.