வைரமுத்துவின் “தமிழ் ஈழக்காற்றே”- நாட்படு தேறல் – பாடல் 04

265

கவிப்பேரரசு வைரமுத்துவின் “நாட்படு தேறல் 100 பாடல்கள்“ திட்டத்தின் நான்காவது பாடலாக வெளிவந்திருக்கின்றது “தமிழ் ஈழக்காற்றே” பாடல்.

இந்த திட்டத்தில் 100 இசையமைப்பாளர்கள் – 100 பாடகர்கள் – 100 இயக்குநர்கள் பங்கெடுக்க உள்ளதுடன், வெவ்வேறு உள்ளடக்கங்களில் உலகத்தின் எல்லாப் பொருள் குறித்தும் பாடப்படும் பாடல்கள் பாடப்படும் என அறிவித்துள்ளார் கவிப்பேரரசர்.

இதன் நான்காவது பாடலாக இசை அரசன் இசையில் சத்யபிரகாஷ் பாடி ஈழத்தமிழரின் வலி சுமந்து வந்திருக்கும் பாடல் அண்மையில் வெளியாகியது. இந்தப் பாடல் குறித்து வைரமுத்து குறிப்பிடுகையில், ”இந்த நூற்றாண்டின் மறக்க முடியாத மனிதத் துயரம் ஈழத்தில் நடந்த இனப்படுகொலை. உடலோ வெளிநாட்டில்; உயிரோ தாய்நாட்டில். புலம்பெயர் மக்களின் புலம்பல் இப்பாடல்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பாடலுக்கான காட்சியமைப்பு எம்மவர்களைக் கொண்டு தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் (இங்கிலாந்து) படமாக்கப்பட்டமை சிறப்பம்சம்.

Song : Tamizh Eezha Kaatrae
Lyricist : Vairamuthu
Composer : Isaiarasan
Singer : Sathyaprakash
Director and Editor : Jeeva Mugunthan
Produced by : Vairamuthu