சார்லஸ் சவரிமுத்துவின் இசையில் ‘மச்சி மச்சி’ பாடல்

270

எம்.சி. மியூசிக் அகடமி இன் தயாரிப்பாக சார்லஸ் சவரிமுத்துவின் இசை மற்றும் வரிகளில் கிராமிய மணம் கமழும் வகையில் உருவாக்கப்பட்ட ‘மச்சி மச்சி’ பாடல் அண்மையில் வெளியாகியது.

இந்தப் பாடலை கைலான் துரை மற்றும் மதுவி வைத்தியலிங்கம் ஆகியோர் பாடியுள்ளனர். காணொளிப்பாடலில் கே.எஸ்.வினோத் மற்றும் லக்ஷி ஆகியோர் பிரதான பாத்திரங்களாக நடித்துள்ளனர். கூட்டுக்குடும்ப பின்னணியில் உறவுகளின் கொண்டாட்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்பாடலில் ஏராளமான துணை நடிக, நடிகையர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஒப்பனை பிரியங்கா, தயாரிப்பு நிர்வாகம் சஞ்ஜி, நடன இயக்கம் கபில் ஷாம், கலை இயக்கம் சந்துரு, சஞ்ஜி, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு தயா (ஏ வன் மீடியா), தயாரிப்பு மற்றும் இயக்கம் ஈ.சி.சந்துரு.

நல்லதொரு கொண்டாட்டமான பாடல், பாடலைக் காட்சிப் படுத்திய விதத்திலும், தொழில்நுட்ப ரீதியிலும் இன்னமும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால் பலரும் கொண்டாடக்கூடிய பாடலாக இது மாறியிருக்கும். வாழ்த்துக்கள் பாடல் குழுவினருக்கு..