House wife க்கு இவ்வளவு சம்பளமா? சிந்திக்க வைக்கும் சிவராஜின் ‘Unlimited’ குறும்படம்

604

பூவன் மீடியா வெளியீடாக அண்மையில் வெளிவந்திருக்கும் குறும்படம் சிவராஜின் ‘Unlimited’. 02 நிமிடத்திற்குள் எப்படி ஒரு மிகப்பெரும் கதையை சொல்லிவிட முடியும் என்பதற்கு இக்குறும்படம் மிகப்பெரிய எடுத்துக்காட்டு.

கணவன் வேலைக்குச் செல்வதும் மனைவி வீட்டில் இருந்து வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்வதும்; பிள்ளைகளை பார்த்துக் கொள்வதும் என்பது ஆண்டாண்டு காலமாக எம் சமூகத்தில் வேறூன்றி போயுள்ள ஒரு சம்பிரதாயம். அதில், இப்போது மாற்றம் ஏற்பட்டு ஆண்களுக்கு நிகராக பெண்கள் வேலைக்குச் செல்வதும் பணம் சம்பாதித்து வீட்டைப் பார்ப்பதும் என சிங்கப் பெண்களாக மாறிவிட்டார்கள்.

ஆனாலும் ‘house wife’ என்கின்ற பேரில் இன்றும் வீட்டோடு பல பெண்கள் இருக்கின்றார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவ்வாறாக குடும்பத்துக்காக தன்னை அர்ப்பணிக்கக்கூடிய பெண்களிற்கான ஊதியம் வரையறையற்றது ‘Unlimited’ எனக்கூற விளைவதே இக்குறும்படம்.

Women & Media collective ஆல் கடந்த வருடம் நடத்தப்பட்ட குறும்படப்போட்டிக்காக இதனை சிவராஜ் தயாரித்திருந்தார். ஒளிப்பதிவு & படத்தொகுப்பு சிவராஜே! இசை பூவன் மதீசன். படத்தில் உயிரோட்டமாக நடித்திருக்கின்றார்கள் திருஞானம் தர்மலிங்கம், சந்திரா தர்மலிங்கம், அபிஷேர்கன் தர்மலிங்கம்.