மே 30 ஆம் திகதி யு-ரியூப்பில் வெளியாகிறது ஜனா ரவியின் ‘Frame of Time’ குறும்படம்

483

Ranjanas cine magic தயாரிப்பில் உருவாகியுள்ள ‘Frame of time’ குறும்படம் எதிர்வரும் மே 30 ஆம் திகதி யு-ரியூப்பில் வெளியாகவுள்ளதாக அதன் இயக்குனர் ஜனா ரவி அறிவித்துள்ளார்.

ஏ.கே.சந்துரு, ரெமோ நிஷா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இக்குறும்படத்துக்கான ஒளிப்பதிவு சார்ள்ஸ் பெர்ணாண்டோ, படத்தொகுப்பு கிரஷன் பிரசாந்த், இசை மார்க் ஜோஷப், கலை கோபிதரன், கதை – வசனம் ஷோமிகா, தயாரிப்பு நிர்வாகம் ஷான் ரொஷான், தயாரிப்பு காயத்திரி ஜனா.

இக்குறும்படத்துடன் சேர்த்து இன்னும் சில குறும்படங்களை ஒன்றாக திரையரங்கில் வெளியிடும் எண்ணத்தில் இருந்த போதும் அண்மைய கொவிட்-19 நிலைமைகள் அதற்கு இடம் கொடுக்காத காரணத்தினால் இம்மாதம் யு-ரியூப்பில் அதனை வெளியிட தீர்மானித்துள்ளதாக குறும்படத்தின் இயக்குனர் குவியம் இணையத்திடம் தெரிவித்துள்ளார்.