இறக்க முடியாத கிரகம் இந்தக் ‘கல்யாணக்கரகம்’

547

ஆதி எம் கிரியேசன்ஸ் சார்பில் பிரணவனின் தயாரிப்பில் மதி சுதாவின் இயக்கத்தில் வெளிவந்துள்ள பாடல் ‘கல்யாணக்கரகம்’.

நம் சமூகத்தில் வேரூன்றி இருக்கும் சீதனப்பிரச்சனை + பெண்ணைப் பெற்ற குடும்பங்கள் அதற்காக படும் பாடு பற்றி நகைச்சுவையுடன் சொல்லியிருக்கும் இப்பாடலை ‘புட்டு பாட்டு’ புகழ் உமாகரன் ராசையாவுடன் மதன் சி எழுதியுள்ளார். பாடலை ஹரி தேவாவுடன் இணைந்து மதன் சி பாடியும் உள்ளார்.

ஜொனாவின் இசையில் உருவான இப்பாடலை மதிசுதா அழகாக இயக்கியுள்ளார். காணி, விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் என பலதை விற்று தன் தங்கையை Bsc படித்த மாப்பிள்ளைக்கு திருமணம் முடித்துக் கொடுக்கிறார். இந்த கிரகம் பிடித்த சீதனம் தேவையில்லாத ‘கல்யாணக்கரகம்’ என பாடலூடே சொல்ல விளைகிறார். ஆனாலும் இந்தக் கரகத்தை பல குடும்பங்களும் தலையில் இருந்து இறக்க முடியாமல் தான் திண்டாடுகிறது.

மதிசுதா, மதன் சி, தரு, வஜி, ரங்கன், ரதீஸ், சசிக்குமார், சேகர், அம்பிகை நடித்திருக்கும் இப்பாடலுக்கான ஒளிப்பதிவு ஏ.கே.கமல். ஒப்பனை Agal by shaki. வடிவமைப்பு கதிர்.

Licensed to – Aathi M Creations
Produced by – Pranavan
Directed by – Mathisutha
DOP – AK Kamal
Music – Jona
Lyrics – Umakaran Rasaiya & Mathan.சி
Singers – Hari Theva & Mathan.சி
Cast: Mathisutha | Mathan.சி | Tharu | Vaji |Rangan Rathees | Sasikumar (Billa) | Sekar (Kado) | Ambikai
MUA – Agal by shaki
Design – Kathir