தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பைப் பேசும் ‘அன்புள்ள அப்பா’

1081

ஈழ சினிமாவில் நம்பிக்கை தரும் படைப்பாளி, இளம் இயக்குனர் ரெஜி செல்வராஜாவின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள ‘அன்புள்ள அப்பா’ காணொளிப்பாடல் இலங்கேயன் பிக்சர்ஸ் யு-ரியூப் தளத்தில் அண்மையில் வெளியாகியுள்ளது.

இந்தப்பாடலுக்கான இசை துஸ்யந்தன் கேதீஸ்வரன். ஈஸ்வரன் வாகீசனின் வரிகளில் உருவான இந்தப்பாடலை துஸ்யந்தன் கேதீஸ்வரனே பாடியுள்ளார். பாடல் ஒளிப்பதிவு ரெஜி, படத்தொகுப்பு அலெக்ஸ் கோபி. பாடலில் தந்தை – மகனாக ஜொனி ஆண்டன், மாஸ்டர் கிஸ்வின் நடித்துள்ளனர்.

தாயின் பெருமைகளை பாடி வெளியாகும் பல பாடல்களுக்கு மத்தியில் தந்தையின் பெருமை போற்றும் பாடல்கள் சிலவும் ஆங்காங்கே வரத்தான் செய்கின்றன. பல தந்தையர்களின் தியாகங்களை இல்லாத போது தான் பல பிள்ளைகள் உணர்கின்றார்கள். ஏனெனில், அவை வெளித்தெரிவதில்லை. தன் பிள்ளை உயரம் தொட தன்னால் முடியாதவற்றையும் செய்யத் துடிப்பது தந்தையின் அன்பு. எப்போதும் பையன்களுக்கு தம் முதல் ஹீரோ அப்பா தான்.

அதனை வரிகளூடும் காட்சிகள் ஊடும் சிறப்பாக காட்சிப் படுத்தியுள்ளார்கள் பாடல் குழுவினர். ரெஜியை பொறுத்தவரை இது இன்னொரு ஹிட்டு. தொட்டதெல்லாம் துலங்குகின்றது. வாழ்த்துக்கள்.