பூவரசி மீடியா நடாத்தும் ‘குறும்படத் தயாரிப்புக்கான தெரிவுப்போட்டி 2021’

982

நீங்கள் சிறந்த கதாசிரியரா? சிறந்த கதை சொல்லியா? இயக்குனர் ஆக வேண்டும் என்பது உங்கள் கனவா? உங்கள் கனவு நிஜமாகும் நாள் தொலைவில் இல்லை. அதற்கான களத்தை அமைத்துக் கொடுக்கிறது பூவரசி அறக்கட்டளை மற்றும் பூவரசி மீடியா.

ஆம்!, நம் நாட்டு சினிமா கலைஞர்களை ஊக்குவிக்கும் குவியம் இணையத்தின் ஊடக அனுசரணையுடன் பூவரசி அறக்கட்டளை, பூவரசி மீடியா இணைந்து நடாத்தும் குறும்படத் தயாரிப்புக்கான தெரிவுப்போட்டி – 2021 (ATMEPOW2021AWD) இற்குரிய விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.

விதிகள் : *07 – 10 நிமிடம் வரையான குறும்படத்தைத் தயாரிப்பதற்கான திரைக்கதையை அனுப்பி வைக்க வேண்டும். *சமூக விழிப்புணர்வு சார்ந்து இருத்தல் வேண்டும்.

தெரிவு செய்யப்படுகின்ற சிறந்த 03 திரைக்கதைகளுக்கான தயாரிப்புக்கு; ஒன்றுக்கு 75,000 ரூபாய் வரை வழங்கப்படும்.

சிறந்த குறும்படம் பார்வையாளர்களால் தெரிவு செய்யப்பட்டு விருதும் வழங்கப்படும்.

அனுப்ப வேண்டிய கடைசி திகதி ஒக்டோபர் 30, 2021.

தொடர்புகளை வட்ஸ் அப், ஈமெயில் போன்றவற்றில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

Atme2020pow@gmail.com & Poovarashimedia@gmail.com