சனா கிரியேஷனஸ், கவினாத் சீதா ஃபிலிம்ஸ்ஸுடன் இணைந்து தயாரித்திருக்கும் குறும்படம் ‘கைத்தலம் பற்றி’. இதனை கவினாத் இயக்கியுள்ளார்.
சனாதனன், சுமித்ரா, சாதனா, பிரசாத், வாணி, அஷ்வின் ஆகியோர் நடித்திருக்கும் இக்குறும்படத்திற்கான ஒளிப்பதிவு வினோ த்ரோன், படத்தொகுப்பு தனு ஹரி, இசை ஏ.ஜே.ஜெரோன்.
காதல் பின்புலத்தில் சமூக அக்கறை கொண்ட ‘கைத்தலம் பற்றி’ குறும்படம்; சமூகத்தில் ஏதிலிகளாக்கப் பட்டவர்கள் மீதும் பரிவு காட்ட வேண்டும் என்ற சிந்தனையை விதைத்துப் போகின்றது. வாழ்த்துக்கள் படக்குழுவிற்கு…
