CVL இன் இசை, வரிகளில் ‘மழைக்குருவி’ – ஜூன் 1 ரிலீஸ்

667

ரப் இசைக் கலைஞன் சி.வி.லக்ஸ் இன் இசை மற்றும் வரிகளில் உருவான ‘மழைக்குருவி’ பாடலின் ரீசர் அண்மையில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்பாடல் எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரவீன் வழங்கும் இந்தப்பாடலை இலங்கையின் முன்னணி இசையமைப்பாளர் ஷமீல் பாடியுள்ளார். டூஃபிலிம் பிரசாத்தின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்பாடலை ஆக்கோ ரணில் இயக்கியுள்ளார். பிரவீன், யதுசா ஆகியோர் நடித்துள்ளனர். CVL இன் வழக்கமான பாடல்களுடன் ஒப்பிடும் போது இது சற்று வித்தியாசமாக இருக்கும் என்பது ரீசரை பார்க்கும் போதே தெரிகிறது.