உமாகரன் ராசையாவின் நெருப்பு வரிகளில் ‘உங்களில் ஒருவன்’ பாடல்

2019

‘புட்டுப்பாட்டு’, ‘ஒப்பரேஷன் வன்னி’ என அடுத்தடுத்த ஹிட்களை வழங்கிய உமாகரன் ராசையா புதிதாக வெளியிட்டுள்ள பாடல் ‘உங்களில் ஒருவன்’. ராப் இசை வடிவில் சமூக அவலங்களை பேசும் இப்பாடலை அவரே பாடியுள்ளார்.

இலங்கை தமிழ் மக்களின் குமுறல்களை வெளிப்படுத்தும் விதமாக பாடல் வரிகள் அமைந்துள்ளன. குறிப்பாக அண்மைய ஃபோர்ட் சிற்றி விவகாரம் முதல் 3 தசாப்தத்திற்கு முன்னர் தமிழ் மண்ணில் இடம்பெற்ற யாழ். நூலக எரிப்பு வரை பாடலில் தொட்டுச்செல்கிறார். இதனால் பாடல் தமிழ் மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்த பாடலுக்கான இசையினை திசோன் விஜயமோகன் வழங்கியுள்ளார். ‘ஒப்பரேஷன் வன்னி’யின் இசையமைப்பாளரும் இவரே.

லிரிக்கல் வீடியோவாக வெளிவந்த இந்த பாடலுக்கு மதுஸ் ஜேம் படத்தொகுப்பினையும், வாகீசன் ராசையா நிழற்படங்களையும் வழங்கியுள்ள நிலையில் தற்போது 8000 பார்வையாளர்களை இந்த பாடல் யூடியூப்பில் கடந்து செல்கின்றது.

பாடலின் தலைப்புக்கு ஏற்றவாறு அவர் கேட்கும் கேள்விகள் எல்லாம் எங்களில் ஒருவராகவே கேட்டுள்ளார். நிச்சயம் இந்தக் கேள்விகளை நாமும் ஆட்சியாளர்களை நோக்கி கேட்க வைத்திருந்தோம். அவர் கேட்டுவிட்டார். பாடலின் ஊடு ஒரு புரட்சி. இது சமூகத்தின் தேவை. வாழ்த்துக்கள் உமாகரன் & டீம்.