சிந்தனைக்குள் சிக்கிக்கொண்ட பேரழகி இவள் சிவி லக்ஸின் ‘மழைக்குருவி’

1312

சிவி – ஷமீல் இணைவில் உருவாகி இணையத்தில் பட்டையக்கிளப்பி வரும் பாடல் ‘மழைக்குருவி’. பல இளசுகள் முணுமுணுக்கும் பாடலாகவும் இது தற்போது மாறியுள்ளது.

ராப் இசைக்கலைஞராக பல ஹிட்களை கொடுத்த சிவி லக்ஸ்ஸுக்கு ஒரு இசையமைப்பாளராக முத்திரை பதிக்கும் பாடலாக இது அமையும் என்பதில் ஐயம் இல்லை. ஷமீலின் அழகான மனதை மயக்கும் குரலுடன் ஆரம்பமாகும் இம்மழைக்குருவியில் ராப் வரிகளுடன் சிவியும் இணைந்து கொள்கின்றார். இந்தப் பாடலுக்கு இவரை விட்டால் வேறு எவரும் பொருத்தமாக இருக்கமாட்டார் எனும் அளவிற்கு ஷமீல் கலக்கியுள்ளார். தான் ஒரு ‘மெலடி கிங்’ என்பதையும் நிரூபித்துள்ளார்.

மறுபுறத்தே சிவி இசையுடன் பாடல் வரிகளிலும் முத்திரை பதித்துள்ளார். ஒரு கைதேர்ந்த பாடலாசிரியராக அவரது வரிகள் இப்பாடலில் பட்டுத் தெறிக்கின்றன. எதுகை – மோனையுடன் அமைந்த கீழ்வரும் வரிகள் சில அதற்குச் சான்று.

சிந்தனைக்குள் சிக்கிக்கொண்ட பேரழகி
அடி இவ்வனத்தில் நீ ரெட்டை வால் குருவி
மலைக்காட்டின் நடுவிலே என்னருகில் நீ
குளிர்பனியிலும் எரிக்குது உன் விழிகள் தீ

ஒரு புறம் இசையில் இவர்கள் அதகளம் செய்திருக்க மறுபுறம் காட்சி அமைப்பில் இயக்குனர் ஆக்கோ ரணிலும் ஒளிப்பதிவாளரும் போட்டிபோட்டிருக்கின்றனர். மலை நாட்டின் குளிர்ச்சியை கண்களில் தந்து போயினர். பாடல் ஒலி வடிவிலும் காணொளியாகவும் மெச்சும்படி உள்ளது.

இந்தப் பாடலை நம் நாட்டின் புகழ் பெற்ற சொல்லிசைக் கலைஞர் கிரிஷான் மகேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டமை கூடுதல் சிறப்பு.