மதிசுதாவின் ‘வெடி மணியமும் இடியன் துவக்கும்’ குறும்படம்

435

ஈழத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மதிசுதாவின் இயக்கத்தில் இன்று (29.05.2020) வெளியாகியுள்ள குறும்படம் ‘வெடி மணியமும் இடியன் துவக்கும்’.

ஏற்கனவே பல்வேறு விருதுகளை வென்ற இந்த குறும்படத்திற்கு ஒளிப்பதிவு ரிஷி செல்வம், படத்தொகுப்பு சஞ்சிகன், இசை பத்மயன்.

எம் மண்ணின் மறைந்த மாபெரும் கலைஞன் முல்லை யேசுதாசனை பிரதான பாத்திரமாகக் கொண்டு, மற்றுமொரு சினிமா செயற்பாட்டாளர் கேசவராஜன், அவர் மனைவி கமலராணி, யாழ். யசீதரன், சங்கர் உள்ளிட்டவர்கள் குறும்படத்தில் நடித்துள்ளனர்.