தென்னிந்திய திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியீடு செய்த நடிகர் ஜெறாட்

339

தென்னிந்திய திரைப்படம் ஒன்றின் முதல் பார்வையை ஈழத்து நடிகர் ஜெறாட் நோயல் தனது சமூக வலைத்தளங்கள் ஊடாக நேற்று (04) வெளியிட்டு வைத்துள்ளார். மாய நதி, பட்டதாரி, டூரிங் டாக்கீஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அபி சரவணன். இவரது ‘தராதிபன்’ என்ற படத்தின் முதற்பார்வையையே ஜெறாட் வெளியிட்டுள்ளார்.

ஈழத்தமிழர்கள் மீது அதிக ஈடுபாடு கொண்ட நடிகர் அபி சரவணன் கடந்த வருடம் கொரோனா முடக்க நிலையில் மதுரையில் அமைந்துள்ள ஈழத்தமிழ் அகதி முகாமில் உள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்துள்ளார். அதேபோல் தான் தனது இந்தப் படத்தின் முதற்பார்வையை ஈழத்தமிழ் நடிகர் வெளியிட வேண்டும் என விருப்பம் கொண்டார். அதனடிப்படையில் அந்த வாய்ப்பு நம்மவர் ஜெறாட்டுக்கு சென்றது.

இது குறித்து நடிகர் ஜெறாட் நோயல் தனது பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

தென்னிந்திய திரைப்படத்தின் முதல் பார்வை ஒன்றை இலங்கை வாழும் பிரபலம் (நடிகர்) ஒருவர் வெளியிட்டு வைக்க வேண்டும் என்று படக்குழு விரும்பி இந்த சந்தர்ப்பத்தை எனக்கு கொடுத்த (டாச்லைட், யாமா, ராஜபாட்டை, ஐயனார் வீதி, ect… ) வெற்றி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஷக்தி அண்ணாவுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள்.

இத் திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர்,
ஒளிப்பதிவாளர், நடிகர், நடிகை மற்றும் படக்குழுவினர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுகளும், இத் திரைப்படம் வெற்றி பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.