நவயுகாவின் ‘பொட்டு’ குறும்படமும் ‘நையப்புடை’ பாடலும் ஒரு அறிமுகம்

501

‘பொட்டு’ என்பது தமிழ் சமூகத்தின் கலாசார அடையாளமாகும். தமிழ்ப் பெண்களுக்கு ‘பொட்டு’ தனி அழகு. அதுவும் திருமணம் ஆனவர்கள் நெற்றியில் அணியும் குங்குமப்பொட்டு (சிவப்பு) இன்னும் அவர்களின் அழகிற்கு அழகு சேர்க்கும். பொட்டையும் எம் பெண்களையும் இலகுவில் பிரித்துவிட முடியாது. அவ்வாறு அது பிரியும் சந்தர்ப்பம் அவர்கள் விதவையாகும் போது மட்டுமே…

திருமணமான தமிழ் பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவதும், கழுத்தில் தாலி கட்டுவதும் ஒரு கலாசாரம், பண்பாடு, சடங்கு. அதுவே, கணவன் இறந்த பிறகு அந்தத் திலகம் அழிக்கப்படும். கணவனை இழந்த பெண் நெற்றியில் திலகமிடக்கூடாது என்பதும் எங்கள் கலாசாரம் தான். இலங்கையில் பெரும்பான்மையான தமிழ்ப் பெண்கள் இந்தப் பாரம்பரியத்தில் இன்னமும் சிக்கியுள்ளனர் என்பது இரகசியமல்ல.

அழகிய பொட்டு கலாசாரத்தின் வலிமிகுந்த கதைகள் ஏராளம் உள்ளன. 30 ஆண்டுகளுக்கும் மேலான போரில் கணவனைத் தொலைத்த பல விதவைகள் எம் சமூகத்தில் உள்ளனர். அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் ஏராளம். காணாமல் ஆக்கப்பட்ட கணவனைத் தேடியலையும் பெண்களும் எம் மண்ணில் ஏராளம் உள்ளனர். ஆனால், என்றோ ஒரு நாள் தன் கணவன் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் அவர்கள் தம் நெற்றியில் திலகமிட்டிருப்பர்.

திரைப்பட செயற்பாட்டாளர் நவயுகா தற்சமயம் இந்த ‘பொட்டு’ என்கிற விடயத்தை அடிப்படையாக வைத்து பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை மையப்படுத்தி குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். அவரும் அதில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் இக்குறும்படம் மக்களின் பார்வைக்காக வெளியிடப்படவுள்ளது.

முன்னதாக நேற்று (07) இக்குறும்படத்தின் விளம்பரப்பாடல் ‘நையப்புடை’ வெளியிடப்பட்டுள்ளது. இதில் குறும்படத்தின் தயாரிப்புப்பணிகளை காணக்கூடியதாக இருக்கின்றது. பல சகோதரமொழிக்கலைஞர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். இந்தப்பாடலும் தமிழ் – சிங்கள மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. சமூகத்தில் வலுவான முடிவுகளை எடுப்பதன் மூலம் ஒருவர் பாதிக்கப்படுவதில் இருந்து விடுபட்டு ஒரு புதிய உலகத்தை உருவாக்க முடியும் என்பதை இந்தப் பாடல் வெளிப்படுத்துகிறது.

Film Credits
Written and Directed by: Navayuga Kugarajah
DOP: Madhuni Hiranya Alahackone
Edited by: Joshuah Heby
Music: MC Raj
Art Director: Goabi Ramanan
Gaffer: Sundaresan Jegadeesan
Colorist: Dinidu Jagoda
Production Design: Joshuah Heby
Sound Design: Nanda Nandhi Jayakody
Sound mixing and mastering: Lal Dissanayake
Make-up: Madara Godage
Costume: Ama Wijesekara

Song
Music: MC Raj
Vocals: Sahithya Gajamugan, Silani Thumara
Rap written and performed by: MC Raj
Lyrics: Manohari Hewawasam, Navayuga Kugarajah
Mixing and Mastering: Sanjit Lucksman
Recorded at: Rooftop Studio Bar
DOP: Eranga Gunasingha
Edit: Joshuah Heby
Produced by: Navayuga Kugarajah