கூட்டுச் செயற்பாடே எம் சினிமாவிற்கான வெற்றியைத் தரும் – இயக்குனர் ஞானதாஸ்

282

ஈழம் சினிமா வெற்றி பெற கூட்டுச்செயற்பாடே (Collective work) மிக முக்கியமானது என மூத்த சினிமா செயற்பாட்டாளர் ஞானதாஸ் காசிநாதர் தெரிவித்துள்ளார். அண்மையில் இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

தனி நபர் சாதனைக்கான களம் ‘ஈழம் சினிமா’ அல்ல என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், எம் சினிமாவை மக்கள் மயப்படுத்த, அதாவது கமர்சியல் ரீதியாக வெற்றியடையைச் செய்ய கலைஞர்களின் கூட்டுப்பங்களிப்பு முக்கியமாகும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, இன்றிருக்கும் பல இளம் படைப்பாளிகள் தங்கள் படைப்பினூடாக பல நல்ல விடயங்களை வெளிப்படுத்த முற்படுகின்ற போதும் ‘அவசரம்’ காரணமாக அவை வீணாகிவிடுகின்றன என்பதனையும் குறிப்பிட்டுள்ளார். எனவே, கதைக்காக, திரைக்கதைக்காக நிறைய மினைக்கெடல்கள் தேவை என்பதையும் இயக்குனர் ஞானதாஸ் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.