காலம், நேரம் கூட மாறி ஓடும் “நட்பு மாறாதே” – ஜதுர்ஷானின் அட்டகாசமான பாடல்

515

எத்தனை பாடல்கள் வந்தாலும் என்றும் கேட்க இன்பம் தருவது “நட்பு” பற்றிய பாடல். நட்பைப் போற்றும் பாடல்களின் வரிசையில் புதிதாக இணைந்திருக்கின்றது “நட்பு மாறாதே” பாடல். Dasamuga Entertainment மற்றும் ஜதுர்ஷன் சிவகுமார் தயாரிப்பில் உருவான இப்பாடலுக்கான இசையை ஜொனாதன் அமைத்திருக்கின்றார். பாடல் வரிகள் ஜதுர்ஷான். பாடியவர் பிரபாகரன் ஷங்கீர்த்தன்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இப்பாடலை ஜதுர்ஷான் சிவகுமார் இயக்கியுள்ளார். பாடலில் எஸ்.துவா, வி.எஸ்.சிந்து, அஜந்தன் சிவா, ஹரீஸ், ஷரண், துருவ் அருள், மா ரொக்ஷான் ஆகியோர் நடித்துள்ளனர். பாடல் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு சிந்து அருட்செல்வன். உதவி இயக்கம் அமர் ஷாரு. உதவி ஒளிப்பதிவு எம்.சி. ஷாம்.

நட்பைப் போற்றும் பாடல் எனும் போது அதில் வரிகள் முக்கியமல்லவா? தேர்ந்தெடுத்த சொற்களைக் கொண்டு நட்புக்கு பூமாலை சூட்டியிருக்கின்றார் பாடலாசிரியர். காலம், நேரம் கூட மாறி ஓடும் நட்பு மாறாதே… கோடி உறவுகள் இருந்தாலும் நட்பு போல வாராதே.. போன்ற பல வரிகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஆறு நண்பர்களை வைத்து இளமைத்துடிப்புடன் அழகாக பாடலை காட்சிப்படுத்தி இயக்கியுள்ளார் இயக்குனர். வாழ்த்துக்கள் பாடல் குழுவினருக்கு…

Music – Jonathanj
Lyrics – Jathurshan Sivakumar
Vocal – Pirabakaran Shangeerththan
Direction – Jathurshan Sivakumar

Teaser Cut – Kajapriyan Selvakumar
Production Manager – Vijayaratnam Thanushan
Art Direction – Prathap Rion | Mc Sham | Kapilraj | Luxsayan | Victor Kopi
Title and Poster Design – Jathurshan Sivakumar
Subtitles – Thenmoly Vyravanathan | Senthalan Vyravanathan
Song Recorded at Jona Studio