நட்டியுடன் ஜோடி சேர்ந்த சாஷ்வி பாலா!

167

ட்ரீம் ஹவுஸ் சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரிக்கும் புதிய படத்தை ஹாரூன் இயக்குகிறார். சைக்கோ திரில்லர் கதையம்சத்துடன் உருவாகும் இப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தில் நான்கு நாயகிகள் நடிக்கிறார்கள். நாயகிகள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், முக்கிய வேடங்களில் ‘பிளாக் ஷீப்’ நந்தினி, இலங்கையைச் சேர்ந்த சாஷ்வி பாலா மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

சிங்களத் திரைப்பட இயக்குனர் அசோக ஹந்தகமவின் “இனி அவன்” திரைப்படத்தினூடாக அறிமுகமாகிய இலங்கையின் சாஷ்வி பாலா தற்சமயம் தென்னிந்தியாவில் முகாமிட்டு திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

விஜய்யின் பைரவா உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் பேர் சொல்லும் அளவிற்கு இன்னும் அவரது படங்கள் வெளியாகவில்லை. “பிக் பாஸ்” புகழ் ஆரியுடன் நடித்த “எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்” படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தற்சமயம் சதுரங்க வேட்டை புகழ் நட்ராஜ்ஜூடன் ஜோடி சேர்ந்துள்ளார். நட்டி ஹீரோவாக மட்டுமல்லாமல் நல்ல குணச்சித்திர வேடங்களையும் ஏற்று நடிக்கக்கூடியவர். அண்மையில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் அவரது பொலிஸ் வேடம் பலராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், நட்டியுடனான படம் நம்மூர் சாஷ்வி பாலாவிற்கு சிறந்த ஒரு ஆரம்பமாக இருக்கும் எனக்கருதப்படுகிறது. வாழ்த்துக்கள் சாஷ்வி.