தாயின் அன்பைப் போற்றும் “அன்னை மடி” காணொளிப்பாடல்

509

கனடா யோகேஸ்வரன் தயாரிப்பில் முகிலரசன் இசையில் ஈழபிரியன் வரிகளில் ஈழப்புயல் கலைக்கூடம் வழங்கியுள்ள பாடல் “அன்னை மடி”. இந்தப் பாடலை விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா பாடியுள்ளார்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இப்பாடலில் மிதுனா, பிரியா செல்வராஜ், ஜெய்பிரசாத், ஹனுஜன், கிரிஷ்னிகா ஆகியோர் நடித்துள்ளனர். பாடல் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு “இலங்கேயன் பிக்சர்ஸ்” ரெஜி செல்வராசா. இயக்கம் சஞ்ஜய்.

தாய் எனும் தெய்வத்தை உயிருடன் இருக்கும் போதே போற்ற வேண்டும். அவ்வாறான உன்னத உறவு இல்லாவிட்டால் எப்படி இருக்கும்? அந்த துன்ப, துயரத்தை மீளும் நினைவுகளுடன் காட்சிப்படுத்தியிருக்கின்றார் இயக்குனர்.

மிதுனாவின் நடிப்பு கச்சிதமாக இருக்கின்றது. சந்தோசம், சோகம் என தனது நடிப்பால் பார்ப்போரை லயிக்க வைத்து விடுகின்றார். அம்மாவாக நடித்தவரும் சரி, ஏனைய துணை நடிகர்களும் சரி தங்கள் பாத்திரம் அறிந்து நன்றாகவே நடித்திருக்கின்றார்கள்.

Direction – Sanjai
Cast – Mithuna/priya selvaraj/Jeyprasaath/Hanujan/krishnica
Lyrics – Eelapriyan
Music – Muhilarasan
Vocal – Super Singer Priyanka
Dop/Editing – Reji Selvarasa
Ass Camera – Alwish Klinton
Ass Director – G J Jude Jenistan
Art direction – SN Raku
Production Manager – Isaiyalan Newton(Cine Birds Creation)
Poster design – Sazi Balasingam