30 ஆயிரம் பார்வையாளர்களைக் கடந்த “பாட்டி சுட்ட வடை” பாடல்

238

“ராப் சிலோன்“ சார்பில் திஷோன், வாகீசன் கூட்டணியில் உருவாகி இன்று பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்து வரும் பாடல் “பாட்டி சுட்ட வடை”.

திஷோன் விஜயமோகனின் இசையில் வாகீசன் ராசையாவின் வரிகளில் உருவான இந்தப்பாடலை திஷோனும் வாகீசனும் (ராப்) பாடியுள்ளார்கள்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இப்பாடலுக்கான ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் வர்ணச் சேர்க்கை இலங்கேயன் பிக்சர்ஸ் ரெஜி செல்வராஜா. ஒளிப்பதிவு உதவி ஜேம்ஸ் ஐசாக், போஸ்டர் டிசைன் மதூஸ்.

ஈழ சினிமாவில் கவனிக்கத்தக்கவர்களாக பரிணமித்து வரும் இந்த இளையவர்கள், எல்லோரும் அறிந்த பாட்டி வடை சுட்ட கதையையே ட்ரெண்ட்டுக்கு ஏற்ப பாட்டாகியுள்ளனர். ரப் வரிகளுடாக கருத்துப் புரட்சியும் நடந்திருக்கின்றது.

பாட்டிக்கு சுள்ளி பொறுக்கி உதவி செய்து வடையைப் பெற்ற காகத்திடம் தந்திரமாக வடையைப் பறிக்க முயன்ற நரி பற்றி பேசியிருக்கின்றார்கள். உன்னைச் சுற்றி ஆயிரம் நரிகள் இருந்தாலும் நேர்மையாக இருந்தால் எந்தச் சிக்கலும் இல்லை எனச் சொல்லிப் போகிறது பாடல்.

கலர் கலராக சட்டை அணிந்து காலில் கட்டும் போட்டுக் கொண்டு கலக்கலாக நடித்திருக்கிறார்கள் திஷோனும், வாகீசனும். அந்த கால் கால் கட்டு காயக்கட்டு (விபத்து) என்பதையும் சொல்லியிருக்கிறார்கள். அர்ப்பணிப்புக்கு வாழ்த்துக்கள் கலைஞர்களே!

Music , Mix & Mastering : Thishon Vijayamohan
Lyrics : Vaaheesan Rasaiya
Rap : Vaaheesan Rasaiya
DOP, Edit & DI : Reji Selvarasa (Ilankeyan Pictures)
Camera Assistant: James Isaac
Poster Design : Mathus