இசையும் நடனமும் போட்டி போடும் “கானரீங்காரம்” (பதம்)

195

அஜந்த் மியூசிக் தயாரிப்பாக மதுஸ்ரீ ஆதித்தன் குரலில் வெளிவந்திருக்கும் பாடல் “கானரீங்காரம்” (கர்நாடக இசை வடிவிலான பதம்)

தில்லை நாதனுக்கு வண்டின் மூலம் இறைவி காதல் தூது அனுப்பப்படும் அழகான வரிகள். இது நாட்டியத்தில் காதல் ரசத்தினை மிகவும் அழகாக வெளிப்படுத்துகிறது.

கவியோகி, மகரிஷி எனப் போற்றப்பட்டவரும், பன்மொழிப் புலவரும், ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் சிறந்து விளங்கியவருமான சுத்தானந்த பாரதியின் பாடலை அழகாக இசை மீளுருவாக்கம் செய்துள்ளார்கள்.

இதனை அழகாக நெறிப்படுத்தி, ஒலிக்கலவை செய்திருக்கின்றார் ஜொனா ஜொனாதன். யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீட இசை விரிவுரையாளர் மதுஸ்ரீ ஆதித்தன் தன் குரலால் அழகுபடுத்தியிருக்கின்றார்.

காதுக்கு விருந்தளிக்கும் இந்தப் பாடலை கண்ணுக்கும் விருந்தளிக்கும் வகையில் படமாக்கியிருக்கின்றார்கள் கிரிஷ் கிரியேட்டிவ். அவர்களுடைய மேக்கிங் (ஒளிப்பதிவு – படத்தொகுப்பு) பாராட்டக்கூடியது. பாடலின் கதையை தன் நடனத்தினூடு அழகாக வெளிப்படுத்தியிருக்கின்றார் நடனக்கலைஞர் மது கமல். நடன அமைப்பு ஆதித்தியா.

Composer by – Suddhananda Bharathi
Sing by – Mathusri Aadhithan
Dance by – Mathu Kamal
Arrangements Mixing & Mastering – Josaphat jona
Choreography – Aathiththiya
Nathaswaram – #ayanan
Kanchira – Shanmukappriyan
Cinematography – Krish Creative
Joyson – K.C
Derin mel – K.C
Mowshiyanthan- K.C
Maayavan – K.C
Editing – Maayavan K.C
Publicity Designs – Krish Creative
Makeover – Jo Beauty
Produced by – Aadhithan (Ajanth Music)