சிறிய இடைவெளியின் பின் வெளியாகியது “வெளிநாட்டுக்காசு” வெப் தொடர்

1193

‘இம்போர்டஸ்’ தயாரிப்பாக ‘தமிழன் 24’ வெளியீடாக சசிகரன் யோவின் இயக்கத்தில் உருவாகியுள்ள “வெளிநாட்டு காசு” வெப் சீரிஸின் 4 மற்றும் 5 ஆம் பாகங்கள் அண்மையில் வெளிவந்துள்ளன.

ஏற்கனவே, இதன் முதல் மூன்று பாகங்களும் ஒரு மாதத்திற்கு முன்னர் வெளிவந்த நிலையில், சிறிய இடைவெளியின் பின்னர் 4 ஆவது பாகம் கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில், 5 ஆவது பாகம் நேற்று (27) வெளிவந்துள்ளது.

முதல் 3 பாகத்திலும் நான்கைந்து பாத்திரங்களைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்த இந்த தொடரில் இறுதி இரண்டு பாகங்களிலும் மேலும் சில பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொடரின் டைட்டிலுக்கு ஏற்ப வெளிநாட்டில் இருந்தும் (லண்டன்) ஒரு குழு இணைந்திருக்கின்றது.

இந்த தொடரின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு YTS Studios Pictures. இசை பூவன் மதீசன், பாடல் வரிகள் சாந்தகுமார், பாடியவர் ஜோ சித்தன், உதவி இயக்கம் ஜெனிஸ்டன், ஒப்பனை மற்றும் கலை இயக்கம் டரியன், தயாரிப்பு முகாமை சபேசன். எழுதி இயக்கியிருக்கின்றார் சசிகரன் யோ.