ஷமீலின் இசையில் மிதுனாவின் இயக்கத்தில் “வன்னி மண் தேசம்” பாடல்

586

நண்பன் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜான்சன் மற்றும் சுஜித்தின் தயாரிப்பில் ஈழத்தின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஷமீலின் இசையில் வெளிவந்துள்ள பாடல் “வன்னி மண் தேசம்”.

மாணிக்கம் ஜெகனின் வரிகளில் உருவான இந்தப்பாடலை சுவர்ணி பிரசாத், திருக்குமார் மற்றும் எம்.எப்.தமீமா ஆகியோர் பாடியுள்ளனர்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இந்தப்பாடலை நடிகை மிதுனா இயக்கியுள்ளார். பாடலில் அவருடன் மாணிக்கம் ஜெகன், பிரியா செல்வராஜ், ஆகியோர் நடித்துள்ளனர்.

பாடல் ஒளிப்பதிவு சஞ்ஜெய், படத்தொகுப்பு ரெஜி செல்வராசா, போஸ்டர் சசி பாலசிங்கம், உதவி இயக்கம் ஜினு, கலை வின்சன்.

பாடலின் பெயருக்கு ஏற்றது போலவே வன்னி மண்ணின் சிறப்பை எடுத்துக் காட்டுவது போலவே பாடல் வரிகளும், காட்சியமைப்புக்களும் இடம்பெற்றுள்ளன. வன்னியின் குளங்களும், வயல்களும் அழகுப் பெட்டகங்கள். காட்சிகளின் ஊடாக அந்தச் சிறப்பை கச்சிதமாக படம் பிடித்திருக்கின்றார்கள்.

பாடலின் இயக்குனராகவும், நடிகையாகவும் மிதுனா தனது பங்கைச் சிறப்பாகவே செய்துள்ளார்.

Direction – Mithuna
Cast – Mithuna/ Manickam jegan / priya selvaraj
Music – Shameel j
Vocal – Swarni prasath / M.F. Thameema /
T. Thirukkumar
Lyrics – Manickam jegan
Dop – Sanjai
Editing – Reji Selvarasa
Ass Director – Rj Jinu
Art direction – Skv Vinshan
Production Manager – Isaiyalan Newton
(Cine Birds Creation)
Poster design – Sazi Balasingam
Producer – S.Jansan / Sujith