ஈசனின் உள்ளத்தை உருக வைக்க மீண்டும் ஒரு “சாமகானம்”

770

“சாமகானம்” என்றால் என்ற என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். இராமாயணம் படித்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். நம்மூர் இந்து ஆலயங்களில் இருக்கும் கைலாசவாகனத்தைக் காட்டி சிறு குழந்தை, “இது என்ன?” என்று கேட்டால், அதற்கு பதில் சொல்ல தெரிந்திருக்க வேண்டும். அதற்காகவேனும், சாமகானம் பற்றி தெரிந்திருக்க வேண்டும். இப்பொழுதும் உங்கள் தேடலுக்கே அதனை விட்டு விடுகின்றோம்.

ஔவை குடில் தயாரிப்பில் “சாமகானம்“ என்றொரு பாடல் வெளியாகியிருக்கின்றது. இந்தப் பாடல், அனன்யா பட் என்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாடகி “ஈசா“ மையத்தில் இடம்பெற்ற சிவராத்திரி ஆராதனையின் போது பாடி ஹிட்டடித்த “Sojugada Sooju Mallige” என்ற பாடலின் கவர் வேர்ஷன்.

அதனை “சாமகானம்” ஆக்கியிருக்கின்றார்கள் பாடல் குழு. ஈசனுக்கும் இராவணனுக்கும் இடையிலான மீண்டும் ஒரு உரையாடல் / வழிபாடு.

பரமேஸ்வரன் ஆரூரனின் வரிகளில் உருவான இந்தப் பாடலுக்கு ரூபன் இசையமைத்திருக்கின்றார். மது பாலா பாடியிருக்கின்றார். காணொளிப்பாடலுக்கான ஒளிப்பதிவு ஜெகதீஸ்வரன் சஞ்சீவ் மற்றும் பாலதீபன் பார்த்தீபன். படத்தொகுப்பு மணிவண்ணன். நடனம் அனு சத்தியசீலன். ஒப்பனை Agal By-shaki.

என்ன தான் கவர் வேர்ஷனாக இருந்தாலும் தமிழுக்கு, எங்களுக்கு அது புதிது தானே! மிகச்சிறப்பாக பாடலை தந்திருக்கின்றது இக்குழு. பாடலில் பல விடயங்கள் அழகாக இருந்தாலும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது மது பாலாவின் மனதை மயக்கும் குரல். பிரதான பாத்திரமேற்று நடித்த இருவரின் இயல்பான நடிப்பு. பாடலை அழகு கெடாமல் இயக்கியிருக்கின்றார் ஆரூரன். வாழ்த்துக்கள் பாடல் குழு.

Director : Parameswaran Arooran
Music : Ruban
Singer : Mathu Bala
Lyrics : Parameswaran Arooran
Editor : Manivannan
Dance : Anu Sathiyaseelan
Cinematography: Jegatheeswaran sancheev & Balatheepan Partheepan
Makeup artist : Agal By-shaki