நாட்டு நடப்பை புட்டுப்புட்டு வைத்த “என்னடா பண்ணி வச்சிருக்கிறீங்க?”

455

இணுவையூர் நித்தியதாஸ் தயாரிப்பு மற்றும் வரிகளில் அருணனின் இசையில் உருவாகியுள்ள பாடல் “என்னடா பண்ணி வச்சிருக்கிறீங்க?” (அங்கர் இல்ல).

சமகால நாட்டு நடப்புக்களை வைத்து எழுதப்பட்ட இந்தப் பாடலினை எம்.சி.ஷான் மற்றும் அஜந்தன் சிவா ஆகியோர் பாடியுள்ளனர்.

பாடல் ஒளிப்பதிவு அஜந்தன் சிவா, படத்தொகுப்பு சிந்து அருட்செல்வன், பாடல் ஒலிக்கலவை ஏ.பி. ரகோடிங் ஸ்ரூடியோ.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் பயணக்கட்டுப்பாடுகளால் சாமானிய இலங்கையர்கள் எதிர்கொள்ளும் அவலங்களை வரிகளினூடு சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றார்.

அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, விவசாயிகள் படும் கஷ்டம், அரசியல்வாதிகளின் ஏமாற்று வேலை என பல விடயங்களை பாடலில் சுட்டிக்காட்டுகின்றனர்.

“பங்கருக்கு அலைந்த கூட்டம் அங்கர் தேடி அலையுது”, என்பது சாதாரண வரியல்ல. எங்கள் அவலங்கள் இன்னமும் தீரவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. சமூக அக்கறையுடன் இந்த பாடலை வெளியிட்ட குழுவிற்கு வாழ்த்துக்கள்.

Producer:- Inuvaiyoor Nithiyathas
Direct By:- Amar Saru
DOP:- Ajanthan Siva
Vocal:-MC Shan( Thilak) | Ajanthan Siva
MUSIC:- Arunan
Mix and Master:-AP Recording Studio
Editing :- Sindhu Arudselvan
Lyrics:- Inuvaiyoor Nithyathash
AD :- Pirathap rion | Mc Sham | Amar Sharaa
PRO:- Thanushan. V