சாந்தரூபன் அறிமுகமாகும் ஜீவானந்தன் ராமின் “திசையெல்லாம் புதுசாச்சே…!” பாடல்

599

இலங்கையின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜீவானந்தன் ராமின் இசையில் “சூப்பர் சிங்கர்” மூலம் புகழ்பெற்ற ஸ்ரீகாந்த் ஹரிஹரன் (உனக்காக வாழ நினைக்கிறேன் – பிகில்) குரலில் அண்மையில் வெளிவந்த பாடல் “திசையெல்லாம் புதுசாச்சே…”

இதில் சாந்தரூபன் நடிகராக அறிமுகமாகியுள்ளார். அருள்செல்வம் வரிகளில் உருவான இந்தப்பாடலை ஸ்ரீகாந்துடன் இணைந்து ஜீவானந்தன் ராமும் பாடியுள்ளார்.

பாடல் ஒளிப்பதிவு ஷானக சஞ்ஜீவ. பாடலை இயக்கியுள்ளார் அருள் செல்வம். படத்தொகுப்பாளரும் அவரே.

நாங்கள் பார்க்கும் கொழும்பு தானா இது? என ஆச்சரியப்பட வைக்கும் வகையில் ஒளிப்பதிவும், இயக்கமும் அமைந்திருக்கின்றது. கொழும்பு மரைன் ட்ரைவில் சில்லிடும் கடல் காற்றைப் போல, பாடலும் இதயத்தை வருடிச் செல்கின்றது.